ஈரோடு அருகில் உள்ள சங்ககிரி துர்க்கம் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
இம்மலை பெரியதாகவும் செங்குத்தாகவும், சிவந்த நிறத்திலும் உள்ளதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. மலை உச்சியை அடைய 1200 படிகள் உள்ளது. மலையின் மீது ஆகாச கங்கை என்ற சுனை உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் அர்த்தநாரிஸ்வரனாக காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் பாலமுருகனாக கையில் வேலேந்தி கிழக்கு முகமாகக் காட்சித் தருகிறார். |